சோலை நகர் சிறுமி கொலையை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் நடந்த போராட்டத்தில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம். எல். ஏ., மற்றும் கட்சியினரை போலீசார் போராடி தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.