மீன்பிடி திருவிழாவில் உற்சாகம்!திண்டுக்கல், நத்தம் செங்குளம் கிராமத்தில் உள்ள சின்ன குளத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில், போட்டி போட்டுக்கொண்டு ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்களைப் பிடித்து சென்றனர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.