பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூர் காளியாபுரத்தில் பழைய ஆயக்கட்டு பாசன காரப்பட்டி கால்வாயில் நான்கு மாதங்களுக்கு முன்பு புதியதாக , 1.56 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலம் உடைந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.