ஆசிர்வாத் மில்லட்ஸ் மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய மில்லட் மகாராணி எனும் மாபெரும் சிறுதானிய சமையல் போட்டி நடந்தது. இதில் இடமிருந்து வலம் - செப் ஷெரீப், செப் ராஜன், இரண்டாம் பரிசு வென்ற லட்சுமி சித்தானந்தா, மூன்றாம் பரிசு வென்ற கற்பகவல்லி, மில்லட் மகாராணி பட்டம் மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் பரிசு வென்ற குணசுந்தரி, முதல் பரிசு வென்ற மோகன பிரியா, செப் பத்மநாபன், செப் சுஜீத், செப் ப்ரேம் , செப் சுசீந்திரன், தினமலர் இணை இயக்குனர் ஆர்.ஸ்ரீனிவாசன், செப் தாமு, மாதம்பட்டி குரூப் ஆப் கம்பெனீஸ் தலைவர் மாதம்பட்டி ரங்கராஜ், சித்த மருத்துவர் சிவராமன், ஆசிர்வாத் நிறுவனத்தின் விற்பனை பிரிவு (இந்தியா) தலைவர் ராகவன். இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.