சென்னையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் சாலை மைய தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள செடிகளில் பூத்து குலுங்கும் காகித பூக்கள்.இடம்: நுங்கம்பாக்கம்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து, முளைத்து அழுகி வீணாகின்றன.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்