மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் திருக்கோவில் உண்டியல் காணிக்கை என்னப்பட்டது. முன்னதாக சாவிகள் பரம்பரை அறங்காவலர் வசந்தாவின் வசம் உள்ளதால் பூட்டை உடைத்து காணிக்கைகளை வெளியே எடுத்தனர். இந்து சமய அறநிலையத் துறையினர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் குறித்து, பயிற்சி கையேடுகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இடம்: டிபிஐ வளாகம் நுங்கம்பாக்கம்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.
பஞ்சாபில் கலப்பட பால் உற்பத்தி அதிகரித்து வருவதால் கால்நடைகளை வைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலப்பட பால் உற்பத்திக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் அமிர்தசரஸ் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு பாலை வீதியில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஐரோப்பிய நாடான நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டு அந்நாட்டின் மிக உயரிய விருதான ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட் என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இது அவர் பெறும் 32வது உலகளாவிய விருது. இடம்: ஒஸ்லோ.