தமிழக விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் சிறப்பாக பணியாற்றும் மூன்று ஊடகவியலாளர்களுக்கு நாரதர் ஜெயந்தி விருது வழங்கப்பட்டது.இடமிருந்து விருது பெற்றவர்கள் கோதை ஜோதிலட்சுமி, கிருஷ்ணன், விஜயகிருஷ்ணன் , சிறப்பு விருந்தினர்கள் துணைவேந்தர் சுரேஷ், செய்தி வாசிப்பாளர் (ஓய்வு) ஷோபனா ரவி, அமைப்பின் பொறுப்பாளர் ஸ்ரீராம்.
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் மேற்கு வங்கம் பீகார் அணிகள் மோதின.
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏ.கே.டி.,பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த். ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.