தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி , டி.என்.ரைஸ் என்ற தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை திறந்து வைத்து மேலும், டி.என்.ரைஸ் இலட்சியினை வெளியிட்டார் உடன் இடமிருந்து தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமை செயலர் ககன் தீப் சிங்,தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குனர் ஷ்ரேயா சிங்.இடம் : கிண்டி.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.