கொளத்தூர் தொகுதியில் முதல்வர், நலத்திட்ட உதவிகளை வழங்க வந்திருந்தார் அப்போது பெரவள்ளூர் அகரம் எஸ் ஆர் பி கோயில் தெரு சாலை முழுவதும் வாகனங்கள் அனுமதிக்காமல் சாலை அடைக்கப்பட்டது. இதனால் பேப்பர் மில்ஸ் சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்றும் எஸ். ஆர்.பி. கோவில் தெரு சாலை வழியாக வாகனங்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.