கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அருகே, தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, அமைச்சர்கள் முத்துச்சாமி,பொன்முடி, வேலு, மகேஷ், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்டோர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.