கடலூர் மஞ்சக்குப்பம் கிளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு போட்டியில் வென்ற மாணவர் மாணவிகளுக்கு மாநில செயலாளர் திருமலை பரிசு வழங்கினார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.