தமிழ்மொழி அகாடமி சார்பில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் ஹண்டே எழுதிய இரண்டு நூல்களை, பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் வி.ஐ.டி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் வெளியிட்டனர் உடன் இடமிருந்து தொழிலதிபர் வி.ஜி.பி சந்தோசம், நூலாசிரியர் ஹண்டே, நீதியரசர்கள் ஜெய்சந்திரன், பிரகாஷ், பேராசிரியர் ஆசிர்வாதம் ஆச்சாரி.இடம் : ஆர்.ஏ.புரம், சென்னை.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.