கோவை நீலாம்பூர் செரயாம் பாளையம் அருகே கார்த்திபுரம் நகர் அறிமுக விழா நடந்தது. இதில் கார்த்திபுரம் உண்ணாமலை புரமோட்டர்ஸ் கார்த்திகேயன் பேசினார். இடமிருந்து வளம் சங்கர் அசோசியேட் பொன்னுசாமி, இன்ஜினியர் சிவகுமார், ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம், கார்த்திகேயன் ராஜேஸ்வரி, உண்ணாமலை புரமோட்டர்ஸ் மற்றும் மருத்துவமனை இயக்குனர் நவீன் உள்ளிட்டோர்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.