நாளுக்கு நாள் அதிகரிக்கிறது போக்குவரத்து நெருக்கடி.! வளர்ந்து வரும் கோவையில் போக்குவரத்து நெருக்கடிக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் மேட்டுப்பாளையம் சாலையில் பயணிக்க வேண்டும் என்றால் சாகசம் கற்றுக்கொண்டு, பொறுமையை கடைபிடித்து செல்ல வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளனர் நம்ம போக்குவரத்து போலீசார். மெல்ல ஊரும் வாகனங்களை கேமரா கண்கள் கண்ட இடம்: வடகோவை மேம்பாலம் அருகே.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.