சி.பி.ஐ., (எம்) அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர்வலம் கோவை காந்திபுரம் சி.பி.ஐ., (எம்) மாவட்ட குழு அலுவலகத்தில் இருந்தது சித்தாபுதூர் வி.கே.கே., மேனன் ரோடு வரை நடைபெற்றது.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.