முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை உச்சநீதிமன்றம் ஜாமினில் விடுவித்ததை அடுத்த மேட்டுப்பாளையத்தில் திமுகவினர் இனிப்பு வழங்கினர். இதில் முன்னாள் எம்எல்ஏ அருண்குமார் நகர செயலாளர் முனுசாமி யூனிஸ், கலிங்கா கணேசன், நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய நாடான நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டு அந்நாட்டின் மிக உயரிய விருதான ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட் என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இது அவர் பெறும் 32வது உலகளாவிய விருது. இடம்: ஒஸ்லோ.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. இதில் தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் உட்பட பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
கோடை வெயிலில் வாடும் விலங்குகளை குளிர்விக்க சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஷவரில் குளித்து கும்மாளமிட்ட யானை.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.