தினமலர் மாணவர் பதிப்பு. பட்டம் இதழ் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து வழங்கும், பதில் சொல் பரிசை வெல் என்னும் வினாடி - வினா நிகழ்ச்சி, கோவை சரவணம்பட்டியில் உள்ள இளங்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா, பள்ளி முதல்வர் ராமப் பிரியா உள்ளிட்டோர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.