இந்திய அஞ்சல் துறை சார்பில் கோவை சுகுணா மண்டபத்தில் நடந்த தபால் தலை கண்காட்சியில் நீலகிரி வரை ஆடு புகைப்படம் தபால் அட்டையை தபால் துறை மேற்கு மண்டல இயக்குனர் அகில் நாயர் வெளியிட, நீலகிரி வரையாடு திட்ட இயக்குனர் பெற்றுக்கொண்டார். இடமிருந்து கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு, கோவை கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர், ஈரோடு கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன், சேலம் கிழக்கு கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.