கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்று தரைப்பாலம் பெரிய கங்கணங்குப்பம் கும்தா மேடு கரைகளை பலப்படுத்த கோரி கிராம மக்கள் கரையோரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.