சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும் அமிர்த பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட நவீன ரயில் பெட்டிகள் மற்றும் சுற்றுலா பயணியருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்படும் பெட்டிகளையும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.