பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகை கொண்டாடிய நிலையில் வழக்கத்திற்கு மாறாக காற்று மாசுடன் புகை மூட்டமாக காட்சியளித்த சென்னை நகரம். இடம் : பள்ளிக்கரணை.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.