சென்னை வர்த்தக மையத்தில் நடந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் 2023 , 2024 ஆம் ஆண்டிற்கான மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பெற்றுக்கொண்டார். உடன் இடமிருந்து தி.மு.க எம்.பி. டி.ஆர் பாலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன். இடம் : நந்தம்பாக்கம்.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.