சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில், தினமலர் நாளிதழ் மற்றும் சத்யா இணைந்து வழங்கும் மாபெரும் வீட்டு உபயோக பொருள்களின் நுகர்வோர் கண்காட்சியை செயின்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் மற்றும் சின்னத்திரை நடிகை நந்தினி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். உடன் இடமிருந்து பேபர் பிராங்க் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி ஜாபர் கான், தினமலர் நாளிதழ் இணை இயக்குநர் ஆ. லட்சுமிபதி, இணை ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குநர் ஆர். சீனிவாசன்.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் குறித்து, பயிற்சி கையேடுகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இடம்: டிபிஐ வளாகம் நுங்கம்பாக்கம்
வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.