தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த குறு வட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் வெங்கடாசலபுரம் ஸ்ரீ வரத வேங்கடரமண பள்ளி, முத்துதேவன்பட்டி டி.எம் ஹெச்.என்.யூ., மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின.
தமிழக சட்டசபை சபாநாயகரும், அந்துமணியின் அதி தீவிர வாசகருமான ஜேசிடி பிரபாகரை சமீபத்தில் மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் சந்தித்து அந்துமணி பதில்கள் என்ற புத்தகத்தை பரிசளித்தார். இடம்: சேத்துப்பட்டு, சென்னை.
கோடை வெயிலில் வாடும் விலங்குகளை குளிர்விக்க சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஷவரில் குளித்து கும்மாளமிட்ட யானை.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.