ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள காஞ்சி மடத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 120 வேத பண்டிதர்கள் பங்கேற்ற, விஸ்வாவசு சாதுர்மாஸ்ய அக்னிஹோத்ர சதஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று, காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றார். பின், வேத பண்டிதர்களை கவுரவித்தார். நிகழ்ச்சியை பால பெரியவரும் கலந்து கொண்டார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.