மதுரை பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து தினமலர் நாளிதழில் படம் வெளியானதை தொடர்ந்து அப்பகுதியில் கடைகள் அகற்றப்பட்டன. இடம்: எஸ்.பி.ஓ.ஏ.,காலனி பிரிவு.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.