பிராட்வே பஸ் நிலையம் 823 கோடி ரூபாயில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும்படி துவங்கி உள்ளது. இதற்காக அங்குள்ள குறளகம் கட்டடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. அதே நேரத்தில் ராயபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.