ஜிஎஸ்டி குறித்த விளக்கக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் என்ற புத்தகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியிட்டார். சென்னை மக்கள் மன்ற நிர்வாகி சுந்தர்ராமன் பெற்று கொண்டார் (இடமிருந்து) ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி மற்றும் பலர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.