தை மாதத்தை வட மாநிலத்தவர்கள், மகர மாதம் என்று அழைக்கின்றனர். அப்போது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் உ.பி.,யின் பிரயாக்ராஜில் பக்தர்கள் புனித நீராடுவர். அவர்களின் வசதிக்காக, கங்கை மீது தற்காலிக மிதவைப் பாலங்கள் கட்டும் பணி இப்போதே துவங்கி விட்டது.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.