டில்லி கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தையடுத்து, தடை செய்யப்பட்ட
ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்களுக்கு சொந்தமான வீடு உள்ள ஜம்மு
காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், கரீமாபாத் கிராமத்தில் போலீசார் திடீர்
சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதி முழுவதும் போலீசார்
குவிக்கப்பட்டிருந்தனர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.