அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டவுடன் ஆசிரியர்கள் வழங்கிய மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்களுடன் மாணவர்கள் .இடம்: உடுமலை கணக்கபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி.
டியூகாஸ் மேலாண்மை இயக்குநர் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாகவும், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த டியூகாஸ் உறுப்பினர்கள்.
புதுச்சேரி லோக் நிவாஸ் வளாகத்தில் அதிமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தற்காலிக சபாநாயகராக கவர்னர் கைலாஷ் நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அருகில் முதல்வர் ரங்கசாமி.
கள்ளக்குறிச்சி அடுத்த பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
புதுச்சேரி லோக் நிவாஸ் வளாகத்தில் அதிமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு தற்காலிக சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்து வைத்த கவர்னர் கைலாஷ் நாதனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அருகில் முதல்வர் ரங்கசாமி.