தமிழகத்தில் கொண்டாடப்படும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை, வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில், வீட்டின் முன் பிரம்மாண்டமான வண்ணக்கோலமிட்ட பெண்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.