இன்றைய போட்டோ

அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்...; நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறுகிறேன்...: இது எப்படி இருக்கு......:மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்த சுனில் ஆனந்த், திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகி சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த டி ஆர் சண்முகசுந்தரத்தை வாழ்த்தவும், இவர் அவரை வாழ்த்தவும் இருவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. இடம்: மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகம் அருகே.
05-Apr-2026
இன்றைய போட்டோ19-May-2026

2/

3/
பஞ்சாபில் கலப்பட பால் உற்பத்தி அதிகரித்து வருவதால் கால்நடைகளை வைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலப்பட பால் உற்பத்திக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் அமிர்தசரஸ் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு பாலை வீதியில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
19-May-2026

4/

5/
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. இதில் தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் உட்பட பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
19-May-2026

6/
இன்றைய போட்டோ18-May-2026

7/

8/
9/

10/






