பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியை ஒட்டிய அய்யன்கொல்லி மற்றும் கேரளா வயநாடு பகுதியில் மழை பெய்யும் நிலையில் சேரங்கோடு சுற்றுப் பகுதியில் இதமான காலநிலை நிலவி வருகிறது.
குறிஞ்சி பூக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் வகையே அதிகம் அறியப்பட்டாலும் நான்கு மற்றும் எட்டு ஆண்டுகள் இடைவெளியில் பூக்கும் அரிய குறிஞ்சி செடிகளும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளன. தற்போது பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணியர் பார்த்து ரசித்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பக்தியின் வடிவமாக கலைஞரின் கைகளில் உயிர்பெறும் விநாயகர் சிலைகள் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இடம்: கோவை, சுண்டக்காமுத்தூர் ரோடு
உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவருமான நல்லகண்ணு சிலையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திறந்து வைத்தார்.இடம்: தண்டையார்பேட்டை.