ADDED : ஜூன் 19, 2025 11:40 PM

மைசூரு: மைசூரின் கொடவா சமாஜ் இளைஞர் பிரிவு, கொடவா சமாஜ் மைசூரு சங்கம் இணைந்து, இம்மாதம் 27, 28, 29ம் தேதி 'கொடவா ஹாக்கி பிரீமியர் லீக்' போட்டி நடத்துகிறது.
மைசூரு சாமுண்டி விஹார் மைதானத்தில் மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில், கூர்க் யுனைடெட்; கனெக்டிங் கொடவாஸ்; அன்ஜிகேரி நாட்; பாலே தாலுக்; சவுத் சைட் ரேஞ்சர்ஸ்; கூர்க் டைடன்ஸ்; எம்.டி.பி., ராயல்ஸ்; கொடவா டிரைப்; கொடவா வாரியர்ஸ்; கோகட் ஸ்டிரைக்கர்ஸ் என பத்து அணிகள் மோதுகின்றன.
பதிவு செய்யப்பட்ட 270 வீரர்களில், பத்து அணிகளுக்கு 175 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய ஐ.பி.எல்., கிரிக்கெட் போன்று, இவர்களை ஏலத்தில் எடுக்கும் நடைமுறை, மைசூரில் உள்ள தனியார் ஹோட்டல் கடந்த 1ம் தேதி நடந்தது.
போட்டியை ஆன்லைனில் பார்க்கும் வகையில் யு டியூப் சேனலில், 'கொடவா ஸ்வாரா' பெயரில் தனி சேனல் துவங்கப்பட உள்ளது.