Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/ஆடுகளம்/ ஆரவாரமான மாட்டு வண்டி

ஆரவாரமான மாட்டு வண்டி

ஆரவாரமான மாட்டு வண்டி


ADDED : அக் 09, 2025 10:57 PM

Follow on Google

ADDED : அக் 09, 2025 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையோடு ஒன்றியிருந்த அம்சங்களில், மாட்டு வண்டிகளும் ஒன்றாகும். இன்று நாம் இதை மறந்துவிட்டோம். சில கிராமங்களில் இப்போதும் மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக உள்ளது. அவ்வப்போது மாட்டு வண்டி போட்டிகள் நடத்தி, மக்களை உற்சாகப்படுத்துவதை பார்க்கலாம்.

மாட்டு வண்டி போட்டிகள், விவசாயிகளின் வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறது. காளைகளின் உடற்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

கிராமங்களின் சம்பிரதாய விளையாட்டுகளில், மாட்டு வண்டிப் போட்டியும் ஒன்றாகும். இந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆண்டுதோறும் மாட்டு வண்டி ஓட்டப்பந்தயம் ஏற்பாடு செய்வது, கிராம மக்களின் ஒற்றுமைக்கு சாட்சியாகும்.

மைசூரு நகரின், துருகநுாரு கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன், மாட்டு வண்டிப்பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுப்புற கிராமங்களின் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். துருகநுாரு கிராமத்தின் பிரதான சாலையில் உள்ள பொன்னக்கி சித்தப்பா என்பரின் நிலத்தில், கெம்பேகவுடா நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட இரட்டை காளைகள் பங்கேற்று, மின்னல் வேகத்தில் ஓடியது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

சுற்றிலும் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கைத்தட்டி, விசில் அடித்தும், ஆரவாரம் செய்து, மாடுகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், விவசாயிகளுக்கும் வெற்றிக்கோப்பை, விருது சான்றிதழ் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக 50,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 25,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய், ஆறுதல் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap