/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
உணவு
/
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் செம்பருத்தி டீ
/
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் செம்பருத்தி டீ
ADDED : மே 16, 2025 09:58 PM

கிரீன் டீ உட்பட மூலிகைகளால் தயாரிக்கப்படும் டீ, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. சாதாரண டீ அருந்துவதற்கு பதில், மூலிகை டீ அருந்துவதால், பல நன்மைகள் உள்ளன. பல நோய்களை விரட்டலாம். இத்தகைய டீக்களில், செம்பருத்தி டீயும் ஒன்றாகும். இதில் பல புரத சத்துக்கள் அடங்கியுள்ளது. நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
உடலில் பாக்டீரியா தாக்கத்தை குறைப்பதில், செம்பருத்தி டீ முக்கிய பங்கு வகிக்கிறது. இது பாக்டீரியாக்களை அழித்து, நோய்களில் இருந்து காப்பாற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உடலில் அதிக ரத்த அழுத்தம் இருந்தால், இதயத்தை பாதிக்கும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், செம்பருத்தி டீ அருந்தலாம். இதற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. - நமது நிருபர் -
ரத்தத்தில் சர்க்கரை அம்சம் அதிகம் இருந்தால் நரம்பு, கண்கள், சிறுநீரகத்தை பாதிக்கும். இது இதயம் சம்பந்தப்பட நோய்களுக்கு காரணமாகும், செம்பருத்தி டீ ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கல், வயிற்று போக்கை குணமாக்கும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து, தண்ணீர் ஊற்றி, டீ துாள், சர்க்கரை, ஏலக்காய், நசுக்கிய இஞ்சி, பட்டை, செம்பருத்தி இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அதன்பின் வடிகட்டி சூடாக அருந்தினால், உடலுக்கு மிகவும் நல்லது.
சர்க்கரைக்கு பதிலாக, வெல்லமும் சேர்க்கலாம். விரும்பினால் எலுமிச்சை ரசம் சேர்த்தும் பருகலாம். ஆனால் கர்ப்பிணியர், குழந்தைக்கு பாலுாட்டும் தாய்மார்கள், டாக்டரிடம் ஆலோசனை பெற்று செம்பருத்தி டீயை அருந்தலாம். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் அருந்த கூடாது.
அதே போன்று அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள், முதலில் சிறிதளவு குடித்து பாருங்கள். பிரச்னை ஏற்படவில்லை என்றால், அதிகம் அருந்தலாம்.