sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மங்களூரு

/

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மங்களூரு

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மங்களூரு

சுற்றுலா பயணியரை ஈர்க்கும் மங்களூரு


ADDED : செப் 24, 2025 11:11 PM

Google News

ADDED : செப் 24, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் ஒன்று தட்சிண கன்னடா. இங்கு சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன. இயற்கை நிறந்த பல பகுதிகள் உள்ளன. முக்கியமாக அழகான பல கடற்கரைகள் உள்ளன. அதுபோல, மாவட்டத்திலுள்ள முக்கிய நகரமான மங்களூரில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. மங்களூரு நகரமே இயற்கை அழகால் நிறைந்து காணப்படுகிறது.

இங்குள்ள கோவில்கள், கடற்கரைகள் ஆகியவை சுற்றுலா பயணியரை ஈர்த்து வருகின்றன. அதுமட்டுமின்றி, மங்களூரு பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றி வருகிறது. இதனாலே, ம ங்களூரு 'தென்னகத்தின் காஷ்மீர்' என அழைக்கப்படுகிறது. இந்த நகரம், கடல் உணவு, வரலாற்று தலங்கள், ஆன்மிக மையங்களின் சிறப்பிடமாக உள்ளது. இதில், முக்கியமான சுற்றுலா தலங்களை பற்றி விவரிக்கிறது இந்த கட்டுரை.

பனம்பூர் கடற்கரை மங்களூரில் உள்ள மிகவும் பிரபலமான கடற்கரைகளில் ஒன்று பனம்பூர் கடற்கரை. இந்த கடற்கரை பார்ப்பதற்கு மிகவும் சுத்தமாக இருக்கும். இதனால், பலரும் இங்கு வருவதற்கு விரும்புகின்றனர்.

இ ங்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படு ம் கடற்கரை திருவிழாவை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். அதுமட்டுமின்றி சுவையான கடல் உணவுகள், நீர் விளையாட்டுகள் போன்றவை மிக பிரபலமாக உள்ளது. இங்கு பட்டம் விடும் திருவிழாவும் நடத்தப்படுகிறது.

புனித அலோசியஸ் தேவாலயம் இந்த புனித அலோசியஸ் தேவாலயம் 1878ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தின் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் உலக புகழ்பெற்றவை.

இவை ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் வரையப்பட் டு உள்ளன. இந்த ஓவியங்கள் ஐரோப்பா கலைஞர்களின் கைவண்ணத்தால் உருவானவை. இதை பார்க்க உலகின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப்பயணியர் வருகை தருகின்றனர்.

தண்ணீர்பாவி கடற்கரை மங்களூரி ல் உள்ள மிகவும் அமைதியான கடற்கரைகளில் தண்ணீர்பாவியும் ஒன்றாகும். படகு சேவையின் மூலம் தண்ணீர்பாவி கடற்கரையை அடையலாம். பசுமை சூழலும், சுத்தமான மணலும், மீன் உணவுகள் பிரபலம். கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் பலரும் வருகை தருகின்றனர்.

பிலிகுலா உயிரியல் பூங்கா பிலிகுலா உயிரியல் பூங்காவை பார்க்க ஏராளமானோர் வருகை தருகின்றனர். இங்குள்ள இயற்கைத் தோட்டம், ஏரி, வி லங்குகள் மற்றும் அறிவியல் அருங்காட்சியகம் ஆகியவை குடும்பத்தினருடன் பார்க்க ஏற்ற இடமாகும். கல்வியும் பொழுதுபோக்கும் இணையும் தனித்துவமான மையம்.

சோமநாதேஸ்வரர் கோவில் கடற்கரை அருகே அமைந்துள்ள சோமநாதேஸ்வரர் கோவில், ஆன்மிகமும் இயற்கையும் நிறைந்து காணப்படுகிறது. இந்த கோவிலுக்கு மிக நீண்ட, நெடிய வரலாறு உள்ளது. மங்களூருக்கு செல்வோர் மறக்காமல் சோமநாதேஸ்வரரை தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம்.

மங்களூரு கடற்கரை, வரலாற்றுச் சின்னங்கள், ஆன்மிக தலங்களால் உலகம் முழுதும் சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் சொர்க்கமாக திகழ்கிறது. இங்கு ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல துாண்டும்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us
      Arattai