sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

மஹா சிவராத்திரியில் தரிசனம் தரும் பாம்பு; எம்.ஆர்.பாளையாவில் வேண்டிய வரம் தரும் மஹா கணபதி

/

மஹா சிவராத்திரியில் தரிசனம் தரும் பாம்பு; எம்.ஆர்.பாளையாவில் வேண்டிய வரம் தரும் மஹா கணபதி

மஹா சிவராத்திரியில் தரிசனம் தரும் பாம்பு; எம்.ஆர்.பாளையாவில் வேண்டிய வரம் தரும் மஹா கணபதி

மஹா சிவராத்திரியில் தரிசனம் தரும் பாம்பு; எம்.ஆர்.பாளையாவில் வேண்டிய வரம் தரும் மஹா கணபதி


ADDED : மே 19, 2025 11:42 PM

Google News

ADDED : மே 19, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு ஜே.சி., நகர் பிரதான சாலையில், எம்.ஆர்.பாளையா எனும் முனிரெட்டிபாளையா ஆரம்ப சுகாதார மகப்பேறு மருத்துவமனை முன்பு கிழக்கு திசையை நோக்கி மஹா கணபதி கோவில் உள்ளது.

அரச மரத்தின் அருகில் வீற்றிருந்த விநாயகருக்கு, 1964ல் கோவில் கட்டப்பட்டது. ஒன்றரை அடியில் இருந்த சிலைக்கு பின்புறம், 6 அடி உயரத்தில் மஹா கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மனமுருகி வேண்டுவோரை மஹா கணபதி கைவிட்டதில்லை.

புத்திர பாக்கியம்


சங்கடஹர சதுர்த்தியின் போது, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, பூஜையில் பங்கேற்கின்றனர். பல ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாத தம்பதியர் இங்கு வந்து வேண்டி சென்றால், அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

அதுபோன்று திருமணம் ஆகாதவர்களுக்கும் கணபதி அருள்பாலிக்கிறார். இக்கோவிலேயே திருமணம் வைபவம் நடக்கிறது. இங்கு திருமணம் செய்தோர் அனைவரும் சந்தோஷமாக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியின் போது, இக்கோவில் தேர் உட்பட பல கோவில்களில் இருந்து நுாற்றுக்கணக்கான தேர்கள் பவனி வருகின்றன.

தேவகவுடா கர்நாடக முதல்வராக இருந்தபோது, இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதன்பின், அடுத்த மூன்று மாதங்களில், நாட்டின் பிரதமராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

பஞ்சமுக வடிவம்


விநாயகர் சன்னிதியின் அருகில் சிவன், 6 அடி உயரத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோலத்தில் அருள்பாலிக்கிறார். 6 அடி உயரத்தில் பஞ்சமுக வடிவில் சிவன் காட்சி அளிக்கிறார்.

மஹா சிவராத்திரி அன்று இப்பகுதியில் நடக்கும் ஊர்வலத்திலும் நுாற்றுக்கணக்கான தேர்கள் பவனி வருகின்றன.

அன்றைய தினம், கோவிலில் உள்ள அரச மரத்தின் கீழ் பகுதியில், பக்தர்களுக்கு பாம்பு தரிசனம் கொடுக்கிறது.

பூஜை முடியும் வரை இங்கு இருக்கும். அதன் பின், மரத்தின் மீது ஏறி மறைந்து விடும். பாம்பு வந்ததற்கான தடயமே இருக்காது. தேடி பார்த்தாலும் கண்ணுக்கு தென்படாது.

இம்மரத்தின் கீழ் பகுதியில் நாகதேவதை விக்ரஹம் உள்ளது. இதை வணங்கினால் நாகதோஷத்தை போக்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மஹா கணபதி சன்னிதியின் இடதுபுறத்தில் நவக்கிரஹம் உள்ளது.

கோவில் மேலாளர் ராஜண்ணா, பொருளாளர் பாலகிருஷ்ணா, செயலர் சங்கர்ராஜ் உட்பட நிர்வாகிகளும்; கோவில் பிரதான அர்ச்சகர் பனீந்திர சர்மா, அவரது மகன் ஆகாஷ் சர்மா பி.யு.சி., முதலாம் ஆண்டு படித்து கொண்டே பூஜைகள் செய்து வருகின்றனர்.

கோவிலில் மஹாகணபதி, பஞ்சலிங்கேஸ்வரருக்கு 21 அடி உயரத்தில் இரு விமான கோபுரம் கட்டப்பட்டு உள்ளது.

நவக்கிரஹத்துக்கும் 21 அடியில், பக்தர்களின் கைங்கர்யத்தில் விமான கோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இக்கோவில் பூஜையில் பங்கேற்க, பொருளாளர் பாலகிருஷ்ணாவை, 63608 99601 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us
      Arattai