Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/"பிட்' மாணவர்கள் உடையை கழற்றச் சொன்ன ஆசிரியர் மாற்றம்

"பிட்' மாணவர்கள் உடையை கழற்றச் சொன்ன ஆசிரியர் மாற்றம்

"பிட்' மாணவர்கள் உடையை கழற்றச் சொன்ன ஆசிரியர் மாற்றம்

"பிட்' மாணவர்கள் உடையை கழற்றச் சொன்ன ஆசிரியர் மாற்றம்

ADDED : மார் 25, 2010 02:01 AM


Google News

குருஷேத்ரா : தேர்வில் காப்பி அடித்த மாணவர்களின் உடைகளை அவிழ்க்கச் சொன்னதால் கண்காணிப்பு பணியிலிருந்து ஆசிரியர் மாற்றப்பட்டார்.

அரியானா மாநிலம், குருஷேத்ரா மாவட்டம் இஸ்மாயிலாபஒத் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன் தேர்வெழுதி கொண்டிருந்த மாணவர்களில் சிலர் பிட் அடித்தனர்.

இன்னும் சிலர் மற்றவர்களை பார்த்து எழுதி கொண்டிருந்தனர். இதனால், சந்தேகமடைந்த ஆசிரியர் சுரிந்தர் சிங், "பிட்' அடித்த மாணவர்கள் 10 பேரை அழைத்து உடைகளை அவிழ்க்கச் சொன்னார். இதற்கு மாணவர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். உடைகளை அவிழ்க்காவிட்டால் தேர்வு கூடத்தை விட்டு வெளியேறும் படி கூறினார். சில மாணவர்கள் தேர்வு எழுதாமல் வெளியே சென்று விட்டனர். ஒரு சிலர் ஆடைகளை களைந்து தாங்கள் விடைக்குரிய காகிதங்களை மறைத்து வைத்திருக்கவில்லை. என காட்டினர். இந்த விஷயம் பெரிய பிரச்னையாகி விட்டது.

மற்ற மாணவர்கள் மத்தியில் 10 மாணவர்களை நிர்வாணப்படுத்த முயன்ற ஆசிரியரிடம் விசாரணை நடத்தும் படி கல்வித்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டார். மாவட்ட கல்வி அதிகாரி சரோஜ் லோஜப் வந்து விசாரணை நடத்தினார். "மாணவர்களின் மேலாடையை மட்டும் தான் ஆசிரியர் கழற்ற சொல்லியிருக்கிறார்; ஜட்டியை அவிழ்க்கும் படி அவர் சொல்லவில்லை. இருப்பினும், தேர்வு கண்காணிப்பு பணியிலிருந்து சுரிந்தர் சிங் விலக்கப்பட்டுள்ளார்' என சரோஜ் லோஜப் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us