Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காங்., பொறுப்பாளர் தேர்தல் வாசன் கோஷ்டிக்குள் மோதல்

காங்., பொறுப்பாளர் தேர்தல் வாசன் கோஷ்டிக்குள் மோதல்

காங்., பொறுப்பாளர் தேர்தல் வாசன் கோஷ்டிக்குள் மோதல்

காங்., பொறுப்பாளர் தேர்தல் வாசன் கோஷ்டிக்குள் மோதல்

ADDED : மார் 25, 2010 02:20 AM


Google News

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த காங்.,தொகுதி பொறுப் பாளர் தேர்தலில் மோதல் ஏற்பட்டது.

தண்டபாணி எம்.எல்.ஏ., தலையிட்டு சமாதானப்படுத்தினார். திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை ஆகிய மூன்று சட்டசபை தொகுதிக்கு காங்., பொறுப்பாளர் கள் தேர்தல் நேற்று திண் டுக்கல் நாராயண அய்யர் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தலைவர், துணை தலைவர், 10 பிரதிநிதிகள் உட் பட 20 பேர் தேர்வு செய்வதற்கு கட்சியினர் ஓட்டு போட்டனர். வாசன், சிதம் பரம் கோஷ்டியினருக்கு இடையே ஓட்டு கேட்பதில் கடும் போட்டி இருந் தது. வாசன் அணியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக் கும், ஒய்.எம்.ஆர்.,பட்டி யை சேர்ந்த மணிகண்டனுக்கும் ஓட்டு கேட்பது தொடர் பாக பிரச்னை ஏற் பட்டது. இதனால் மண்டபத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. வாசன் அணிக் குள் மோதல் இருக்கக்கூடாது என தண்டபாணி எம்.எல்.ஏ., செய்தி தொடர்பாளர் ரவி சுப்ரமணியம் இவர் களை சமாதானப்படுத்தினர். இருந்தாலும் வாக்குவாதம் முற்றியதால் நகர் வடக்கு இன்ஸ் பெக்டர் முருகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதானம் செய்ததையடுத்து அமைதியாக தேர்தல் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us