தையூர் தடுத்தாண்டேஸ்வரர் கோவிலில் தோரோட்டம்
ADDED :128 days ago
செஞ்சி: தையூர் தடுத்தாண்டேஸ்வரர் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தையூர் தையல் நாயகி உடனுறை தடுத்தாண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேர்திருவிழா கடந்த 30 ம் தேதி கொடியேத்துடன் துவங்கியது. அன்று காலை கோபூஜையும், மாலை சிறப்பு வழிபாடும் நடந்தது. தினமும் சிறப்பு அலங்கரம், அபிஷேகம் நடந்தது. சித்ரா பவுர்ணமியன்று திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடந்த போது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்தனர்.