வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்துள்ள லட்சுமணர், சீதை சமேத கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்கான பூஜை நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது.
இரவு வாஸ்து பூஜை, கும்ப அலங்காரம், யாக பூஜை, பூர்ணாஹூதி, மூலவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நேற்று காலை பூர்வாங்க பூஜைகளை தொடர்ந்து ஸ்பர்ஸாஹூதி, பூர்ணாஹூதி, யாத்ராதானத்தை தொடர்ந்து, கடம் புறப்பாடாகி வீரசக்தி ஆஞ்சநேயர், கோதண்டராமர், பெரிய ஆஞ்சனேயர் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா குமபாபிஷேகம் நடந்தது.
பின்னர் மூலவர் வீரசக்திஆஞ்சனேயர், லட்சுமணர், சீதை, கோதண்டராமர் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.