உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர், சக்தி விநாயகர், பாலமுருகன், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.

கடந்த 4ம் தேதி துவங்கி சிறப்பு ேஹாமங்களும், 5ம் தேதி மாலை முதல் கால யாக பூஜையை தொடர்ந்து, இரவு யந்திர ஸ்தாபனம், அம்மன் பிரதிஷ்டை நடந்தது.

நேற்று முன்தினம் காலை 2ம் கால யாக சாலை பூஜை, விநாயகர் பூஜை, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி செல்வ விநாயகர், சக்தி விநாயகர், பாலமுருகன், மகா மாரியம்மன் கோவில் விமான கலசங் களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து மூலவர் மகா மாரியம்மன் மற்றும், செல்வ விநாயகர், சக்திவிநாயகர், பாலமுருகன் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.திருப்பணந்தாள் காசிமடம் 22 வது மடாதிபடி சபாபதி தம்பிரான், குளித்தலை ஸ்ரீசக்தி பீடம் சுரேஷ்வர் ஆகியோர் பங்கேற்று சாமி வழிபாடு செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.

விழாவில் ஜோதிமணி எம்.எல்.ஏ., மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !