மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை
ADDED :53 minutes ago
பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் மழை வேண்டி 10 மணி நேரம் ஹரே ராம மஹாமந்திரம் ராம கீர்த்தனம் கூட்டு பிரார்த்தனை நடந்தது.
கிருஷ்ணர், ராதைக்கு விசேஷ திருமஞ்சனம், கிருஷ்ண அஷ்டோந்திரம், லட்சுமி அஷ்டோத்திரம் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி புறப்பாடு நடந்தது.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.