உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி

கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில், வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடந்தது.


கடலுார் திருப்பாதிரிப்புலியூரில், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் விழா நடந்தது. விழாவையொட்டி பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின் வேதமந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியத்துடன் பந்தக்கால் நடப்பட்டது. வைகாசி மகோற்சவம், வரும் 22ம் தேதி காலை 7:30மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும், 26ம் தேதி காலை அதிகார நந்தி தரிசனம், இரவு தெருவடைச்சான் விழாவும், 28ம் தேதி திருக்கல்யாணம், பரிவேட்டை விழாவும் நடக்கிறது. 30ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் ஒன்பதாம் நாள் திருவிழாவாக, தேர் திருவிழா நடக்கிறது. ஜூன் 1ம் தேதி இரவு முருகப்பெருமான் தெப்பல் விழா, 2ம் தேதி திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக விழா, 3ம் தேதி இரவு சண்டேஸ்வரர் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !