பெரியகுப்பம் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1 days ago
சேத்தியாத்தோப்பு: செல்வவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் கடந்த, 2021 ம் ஆண்டு செல்வவிநாயகர் கோவில் கட்டுமான திருப்பணி துவங்கியது. இந்த பணி முழுமையாக முடிந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, கணபதி ேஹாமம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக பூஜை ஆரம்பம் நடந்தது. தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன. தொடர்ந்து காலை 10:14 மணிக்கு யாக சாலையிலிருந்து புனித நீர் கொண்டு செல்லப்பட்டு விமான கும்பாபிேஷகமும், மூலவர் செல்வவிநாயருக்கு கும்பாபிேஷகம் நடந்தது.