உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஜனையுடன் துவங்கிய படுகர் தினவிழா ஏராளமான சமுதாய மக்கள் பங்கேற்பு

பஜனையுடன் துவங்கிய படுகர் தினவிழா ஏராளமான சமுதாய மக்கள் பங்கேற்பு

கோத்தகிரி: கோத்தகிரியில் பஜனையுடன் துவங்கிய படுகர் தினவிழாவில், ஏராளமான சமுதாய மக்கள் பங்கேற்றனர்.


நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள், மே., 15ம் தேதியை படுகர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோத்தகிரி பொரங்காடு சீமைக்கு உட்பட்ட, நட்டக்கல் கிராம மைதானத்தில் விழா நடந்தது. பஜனையுடன் துவங்கிய விழாவில், முன்னதாக அமைதியை பேணி காக்கும் பொருட்டு, வெள்ளை கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, படுகர்களின் தந்தை என போற்றப்படும் ராவ் பகதூர் ஆரி கவுடர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கோத்தகிரி பொரங்காடு சீமை, 19 ஊர் தலைவர் ராமாகவுடர் தலைமை வகித்தார். கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், ஆரூர் தலைவர் முருகா கவுடர், எட்டூர் தலைவர் ஆலா கவுடர் மற்றும் 1000 வீடு தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு விருந்தினர்களாக, உபதலை சாய் நிவாஸ் சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் மற்றும் ஆனந்த குரு ஸ்ரீ மேகநாத் சாய் ஆகியோர் சிரிப்பு விருந்தினர்களாக பங்கேற்று, படுக சமுதாய மக்களும் - ஆன்மீகமும் என்ற தலைப்பில், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினர். தொடர்ந்து, படுக சமுதாய மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பேணி காப்பதன் அவசியம், போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது, சமுதாய மக்கள் 100 சதவீதம் கல்வி அறிவு பெறுவது, கல்வி படித்த இளைஞர்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்துவது, இளைஞர்கள் தொண்டு செய்ய முன்வர செய்வது, திருவிழா, சுப நிகழ்ச்சி துக்க நிகழ்ச்சிகளில் மதுவை முழுமையாக தவிர்த்து, கலாச்சாரத்தை பேணி பாதுகாப்பது என்பன உள்ளிட்ட, சமுதாய சீர்திருத்தம் குறித்து, சமுதாயத் தலைவர்கள் எடுத்துரைத்தனர். இதில், கோத்தகிரி உட்பட, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, சமுதாய தலைவர்கள், கிராமத் தலைவர்கள், சமுதாய சங்கத் தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட, திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !