உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் கடல் கொந்தளிப்பால் நவகிரகங்கள் தண்ணீரில் மூழ்கின

தேவிபட்டினம் கடல் கொந்தளிப்பால் நவகிரகங்கள் தண்ணீரில் மூழ்கின

தேவிபட்டினம்: தேவிபட்டினம் கடல் கொந்தளிப்பின் காரணமாக, கடல் நீர்மட்டம் உயர்ந்து நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கின.


ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டியும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், இத்தலம் பிரசித்தி பெற்ற விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவக்கிரகங்களை பக்தர்கள் கடலுக்குள் சென்று எளிதாக தரிசனம் செய்யும் வகையில், கடலுக்குள் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் கொந்தளிப்பின் காரணமாக நேற்று காலை முதல் தேவிபட்டினம் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால், நவக்கிரகங்களில் தாழ்வாக இருந்த ஐந்து கிரகங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், நவபாஷாணத்திற்கு வருகை தந்த பக்தர்கள் அனைத்து நவக்கிரகங்களையும் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சீற்றம் காரணமாக, கடல் நீரில் இறங்கி நவக்கிரகங்களை சுற்றிவர அதிகாரிகள் தடை விதித்தனார். இதனால் நடைமேடை வழியாகவே பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !