விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED :24 days ago
விருத்தாசலம்: கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் இன்று காலை அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவில், கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.